மலேசியாவில் புத்தாண்டு நிகழ்ச்சிக்குச் சென்ற நால்வர் திடீர் மரணம்
மலேசியாவில் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்குச் சென்ற நால்வர் ஒருவருக்குப் பின் ஒருவராக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களின் மரணங்களுக்குத் தொடர்புள்ளதா என்பதை அதிகாரிகள் ஆராய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் Sunway Lagoon கேளிக்கைப் பூங்காவில் Pinkfish Festival என்ற கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது.
அதில் கலந்துகொண்ட 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட நால்வரும் நிகழ்ச்சி முடிந்த சிறிது நேரத்தில் திடீரென்று உயிரழந்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவர்களின் உடல்களில் காயம் ஏதும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
அவர்கள் நச்சு உட்கொண்டார்களா என்பது தற்போது விசாரிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)