ஸ்பெயினில் இலகுரக விமானங்கள் மோதி நால்வர் உயிரிழப்பு!

வடகிழக்கு ஸ்பெயினில் இலகுரக விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
வடகிழக்கு ஸ்பெயினின் மோயா நகர விமான நிலையம் அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் ஒரு விமானம் விமான நிலையத்தின் அருகே மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து தீப்பற்றியது. குறித்த விமானங்களில் நால்வர் பயிணித்துள்ள நிலையில், அனைவரும் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 12 times, 1 visits today)