ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி
அமெரிக்காவில் ரேடியோ டவர் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் உள்ள ரேடியோ டவர் மீது தனியாருக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேற்று (20) இரவு மோதியது.
மோதிய வேகத்தில் அந்த ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியதோடு தீப்பற்றி எறிந்துள்ளது.
இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பலியானதாக ஹூஸ்டன் மேயர் ஜான் விட்மயர் உறுதிப்படுத்தியுள்ளார்.
(Visited 25 times, 1 visits today)





