தென் அமெரிக்கா

பிரேசிலில் மதுபான விடுதி மீது மர்மகும்பல் துப்பாக்கி சூடு ;4 பேர் பலி

பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ளது பார்க் பாரைசோ நகரம். அங்கு நட்சத்திர மதுபானவிடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு அதிகமானோர் நள்ளிரவில் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மர்மகும்பல் ஒன்று வந்தது. அக்கும்பல் திடீரென விடுதிக்குள் புகுந்து தாங்கள் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இதில் உள்னே அமர்ந்திருந்தவர்கள் பயத்தில் அலறினர். தாக்குதலை நடத்திவிட்டு அந்த மர்மகும்பல் தப்பியோடியது. இதுகுறிந்து அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த திடீர் தாக்குதலில் விடுதிக்குள் இருந்த 4 பேர் உடலில் குண்டு பாய்ந்து ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இறந்தவர்களின் உடல்களை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர்.

சாவ் பாலோ நகரில் பயங்கரவாத செயல்களில் செயல்படும் இருவேறு கும்பலுக்கு இடையே உள்ள முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தரப்பில் கூறப்பட்டது. பொலிஸார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த