சவுதியில் நான்கு போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் முறியடிப்பு
சவுதி வரி மற்றும் சுங்க ஆணையம் 261,000க்கும் மேற்பட்ட ஆம்பெடமைன் போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் 9.8 கிலோகிராம் கிரிஸ்டல் மெத் சம்பந்தப்பட்ட நான்கு கடத்தல் முயற்சிகளை முறியடித்ததாக தெரிவித்துள்ளது.
ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் சர்வதேச விமான நிலையம், துபா துறைமுகம் மற்றும் அல்-பாதா எல்லைக் கடவையில் இந்த பறிமுதல்கள் செய்யப்பட்டன.
முதல் முயற்சியில், துபா துறைமுகத்தில் உள்ள ஆய்வாளர்கள் மர மேசைகளின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த 50,000 ஆம்பெடமைன் மாத்திரைகளைக் கண்டுபிடித்தனர்.
இரண்டாவது முயற்சியில், ஜெட்டா விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் ஒரு பயணியின் பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20,200 மாத்திரைகளைக் கைப்பற்றினர்.
அதனை தொடர்ந்து அல்-பாதா எல்லைக் கடவையில் லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 192,000 ஆம்பெடமைன் மாத்திரைகளை கைப்பற்றப்பட்டுள்ளது.
அதே பாதை வழியாக வந்த மற்றொரு லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 10 கிலோகிராம் மெத்தம்பெடமைனையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.





