இலங்கை செய்தி

இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்காவிற்கு பிணை

மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

ஹிருணிகா பிரேமச்சந்திரவை 50,000 ரூபாய் பிணையிலும், 500,000 ரூபாய் இரண்டு சரீர பிணையிலும் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட மூன்று வருட சிறைத்தண்டனையை எதிர்த்து ஹிருணிகா பிரேமச்சந்திர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

தெமட்டகொட பகுதியில் இளைஞர் ஒருவரை காரில் கடத்திச் சென்றதாக ஹிருணிகா பிரேமசந்திர மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தாக்குதல் உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 03 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ததிஸ்ஸவும், சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜானக பண்டாரவும் ஆஜராகியிருந்தனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!