இலங்கையின் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான இலங்கையின் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் வழங்க அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
இதற்கு முன்னதாக குறித்த கைது நடவடிக்கையை தடுப்பதற்காக அவர் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இருப்பினும் குறித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 1 visits today)