நுகேகொடை பேரணியில் பங்கேற்க முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை!
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் மேற்படி தகவலை வெளியிட்டார்.
அத்துடன், குறித்த பேரணி வெற்றியளிக்கும் எனவும், இதற்கு அனைத்து தரப்புகளும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
(Visited 2 times, 2 visits today)





