இலங்கை

இலங்கை : ஆர்கானிக் முறையில் விளையும் மரக்கறிகளை கோரும் முன்னாள் ஜனாதிபதிகள்!

நுவரெலியாவில் விளையும்  ஆர்கானிக் மரக்கறிகளை தமது பாவனைக்காக பெற்றுக்கொள்ளும் வகையில் முன்னாள் ஜனாதிபதிகள் செயற்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

நுவரெலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உணவு தயாரிக்க நுவரெலியாவில் இருந்து கிடைக்கும் மரக்கறிகளை பயன்படுத்துமாறு ஜனாதிபதி செயலகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நுவரெலியாவிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சொந்தமான காணியில் ஜனாதிபதியின் பாவனைக்காக கரிம மரக்கறிகள் பயிரிடப்பட்டுள்ளதாக அறிந்தேன்.

நுவரெலியாவிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜனாதிபதி செயலகத்திற்கு 60 கிலோகிராம் எடையுள்ள இரண்டு காய்கறி மூட்டைகள் வருவதை அவதானித்தேன்.

ஒவ்வொரு வாரமும் நுவரெலியாவில் இருந்து ஆர்கானிக் காய்கறிகள் அனுப்பப்படுவதை அறிந்தேன், அந்த காய்கறிகளை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தயாரிக்கும் உணவுக்காக பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டேன்.

அந்தத் தலைவர்கள் சாதாரண மக்களுக்காக விளைவிக்கப்பட்ட காய்கறிகளைக்கூட உண்ணவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் அவ்வாறான சலுகைகளை  எதிர்பார்க்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!