சிகிச்சைக்காக இந்தியாவுக்குக் அழைத்து செல்லப்பட்ட நேபாள முன்னாள் பிரதமரின் மனைவி

செப்டம்பர் 9 ஆம் தேதி நடந்த நேபாள போராட்டங்களின் போது பலத்த தீக்காயங்களுக்கு ஆளான முன்னாள் பிரதமர் ஜலநாத் கானாலின் மனைவி மேல் சிகிச்சைக்காக இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
வன்முறை போராட்டங்களின் போது காத்மாண்டுவின் டல்லு பகுதியில் உள்ள கானாலின் வீட்டிற்கு ஒரு கும்பல் தீ வைத்ததில் ரவி லட்சுமி சித்ரகார் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவத்தின் போது 15 சதவீத தீக்காயங்களுக்கு ஆளான சித்ரகார் கீர்த்திபூரில் உள்ள பர்ன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது இடது கை முழுவதுமாக சேதமடைந்துள்ளதாகவும், புகையால் நுரையீரல் பாதிக்கப்பட்டதால் அவருக்கு மார்பு தொற்று ஏற்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் அவர் மேலதிக சிகிச்சைக்காக புது தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)