இலங்கை மாகாண சபைத் தேர்தலை குறிவைக்கும் முன்னாள் அமைச்சர்கள்!
இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் 30 இற்கு மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தேசிய மக்கள் சக்தி அலையை சமாளித்து, தமது கட்சிகளுக்குரிய வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்ளும் நோக்கிலும், மக்கள் மத்தியில் தமக்குள்ள ஆதரவை நாடிபிடித்து பார்க்கும் வகையிலுமே முன்னாள் அமைச்சர்கள் இவ்வாறு களமிறங்கவுள்ளனர்.
நவீன் திஸாநாயக்க, உதய கம்மன்பில, ஹிருணிக்கா பிரேமசந்திர, முஷாரப், மருதபாண்டி ராமேஸ்வரன், வடிவேல் சுரேஷ், யோகேஸ்வரன் உட்பட மேலும் பல முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடுவது பற்றி ஆராய்ந்துவருகின்றனர்.
வடக்கு மாகாணசபைக்கான தேர்தலில் வடக்கிலுள்ள முன்னாள் அமைச்சர்களும் போட்டியிடவுள்ளனர்.
குறிப்பாக கட்சி தீர்மானிக்குமானால் முதல்வர் வேட்பாளராக களமிறங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக சில அமைச்சர்கள் பதவி விலகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





