உலக வங்கி வழங்கிய நிதியை தவறாக பயன்படுத்திய முன்னாள் அமைச்சர்கள்!
தொழில்முனைவோர் மேம்பாட்டிற்காக உலக வங்கி வழங்கிய நிதி, முன்னாள் அமைச்சர்களின் உறவினர்களுக்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், உலக வங்கி நிதி, முன்னாள் அமைச்சர் தயா கமகேயின் மனைவி, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்னவின் மகன் மற்றும் முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் சகோதரர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
“இந்த முன்னேற்றம் குறித்து உலக வங்கி தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக வங்கியின் நிதியைப் பெற்று, எந்தத் திட்டத்தையும் தொடங்காத இந்த நபர்கள் மீது நாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம்,” என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.





