இலங்கை செய்தி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் புகழாரம்

தேர்தலில் படுதோல்வியடைந்தும் இன்று ஒரு ஆசனத்துடன் ஆசியாவின் சிறந்த தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களுக்கு சேவையாற்றுகின்றார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அரச காணிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கடந்த காலத்தில் எமது ஐக்கிய தேசிய கட்சி தோற்ற பின்னர் எமது நடவடிக்கை அமைதியாகவே இருந்தது.

கடந்த 2020 இல் படுதோல்வியை ஐக்கிய தேசிய கட்சி எதிர்கொண்டது.கொரோனா இடர் ,கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக பலர் எங்களிடம் இருந்து பிரிந்து போன நிலையிலும் நாங்கள் கட்சியினை விட்டு வெளியே போகவில்லை.ஆனால் எமது ஜனாதிபதி ஆசியாவில்
படித்த ஒரு சிறந்த தலைவர்.ஜ

னாதபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்றல் வைபவத்தின் பின்னர் இது என்னுடைய முதலாவது பேச்சு தேசிய பட்டியலில் தான் அவர் பாராளுமன்றம் சென்றார்.கடந்த காலங்களில் பிழையாக நீங்கள் வாக்களித்ததால் தான் பல பிழையான தலைவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.

கடந்த கால அரச தலைவர்கள் கோட்டாபய போன்றவர்களால் நாடு சோமாலியாவாக மாறியது. எமது தலைவர் கொரோனா காலத்தில் தடுப்பு மருந்தின் பின்னர் பாராளுமன்ற தேர்தலை நடாத்துமாறு கோரியிருந்தார் ஆனால் தேர்தல் நடாத்தபட்டது.

நடாத்தப்பட்ட தேர்தல் ஏற்பட்ட செலவீனம் தொடர்ச்சியாக ஆட்சி அமைத்தவர்களால் நாட்டினை கொண்டு நடாத்தமுடியாது போனது.

இன்று அனுர குமார திசாநாயக்க,சஜித் என பலர் தேர்தலில் போட்யிட வருகின்றார்கள் .அன்று பலர் அந்த பொறுப்பினை எடுக்கும் வாய்ப்பு இருந்த போதும் அதனை எடுக்கவில்லை ஆனால் எமது தலைவர் அதனை எடுத்தார்.

ஆக அடுத்த தேர்தலே எனதும் அரசியல் பயணத்தின் இறுதி தேர்தல் அதிலிருந்து நானும் அரசியலில் இருந்து விலகி விடுவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை