டக்லஸ் தேவானந்தா சி.ஐ.டியினரால் கைது
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டக்லஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2001-ஆம் ஆண்டு இவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கியை, பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழேயே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2019-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பாதாள உலகத் தலைவன் ‘மாகந்துரே மதுஷிடம்’ முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, அவரிடமிருந்து குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டிருந்தது.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களுடன் முன்னாள் அமைச்சருக்கு இருந்த தொடர்புகள் குறித்து மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





