பிரேசில் முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோவின் வீட்டுக் காவலுக்கான கோரிக்கை நிராகரிப்பு
முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை(Jair Bolsonaro) சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்ற வேண்டும் என்ற அவரது பாதுகாப்புக் குழுவின் கோரிக்கையை பிரேசிலிய(Brazil) கூட்டாட்சி உச்ச நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.
ஆட்சிக் கவிழ்ப்பு சதி செய்ததற்காக 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கும் 70 வயதான போல்சனாரோ உடல்நலக் காரணங்களுக்காக வீட்டிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டு அவரது சட்டக் குழு ஒரு நாள் முன்னதாக கோரிக்கையை தாக்கல் செய்தது.
இருப்பினும், நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை நிராகரித்து அவருக்கு வீட்டுக் காவலை வழங்க போதுமான காரணங்கள் இல்லை என்று தீர்ப்பளித்தது.
70 வயதான போல்சனாரோ கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் கடுமையான விக்கல் மற்றும் குடலிறக்கத்திற்காக பல சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்.





