தென் கொரியாவை அச்சுறுத்தும் காட்டுத் தீ – இறுதி சடங்கில் பற்ற வைத்த நெருப்பினால் விபரீதம்

தென் கொரியாவில் இறுதி சடங்கின் போது பற்ற வைத்த நெருப்பினால் காட்டுத் தீ உண்டாகியிருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத் தீயானது வடக்கு கியோங்சாங் மாகாணத்திலுள்ள உய்சோங் நகரத்தைச் சேர்ந்த மதிக்கத்தக்க நபர் ஒருவரால்தான் உண்டாகியிருக்கக் கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகிக்ககின்றனர்.
இந்நிலையில், உய்சோங் நகரத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடந்த 22ஆம் திகதி அங்குள்ள மலைக்குன்றின் மீதுள்ள அவரது குடும்பக் கல்லறையில் செய்த சடங்கின்போது பற்ற வைத்த நெருப்பினால் இந்தக் காட்டுத் தீயானது உண்டாகியிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தென் கொரிய பொலிஸார் அந்நபரின் மகளிடம் முதற்கட்ட விசாரணையை தற்போது மேற்கொண்டுள்ளதாகவும் விரைவில் அவரிடம் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் தற்செய்லாக காட்டுத் தீ உண்டாக்குபவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும் 30 மில்லியன் வான் மதிப்பிலான பணம் அபராதமாக விதிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.