ஜெர்மனியில் வதிவிட விசா பெற்று குடும்பத்தினரை அழைக்கும் வெளிநாட்டவர்கள்
ஜெர்மன் நாட்டுக்கு அகதிகள் வருவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெர்மன் நாட்டுக்கு வந்து அகதி விண்ணப்பம் மேற்கொண்ட அகதிகள் மனிதாபிமாக அடிப்படையில் அகதிகளாக அங்கிகரிக்கப்பட்டு அவர்கள் இந்த நாட்டிலே வதிவிட விசாவை பெற்று இருந்தால் அவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை நாட்டுக்கு வரவழைப்பதற்காக விண்ணப்பங்களை மேற்கொள்கின்றார்கள்.
இந்நிலையில் இந்த ஆண்டு இவ்வாறு மனிதபிமான அடிப்படையில் விசாவை பெற்றவர்கள் தங்களது குடும்பங்களை இந்த நாட்டுக்கு வரவழைப்பது அதிகரித்துள்ளதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.
அதாவது ஜெர்மனியின் ஆளும் கூட்டு கட்சியானது ஏற்கனவே இவ்வாறு சிரிய நாட்டு அகதி விடயத்தில் கூடுதலானவர்கள் மனிதபிமானம் அடிப்படையில விசா பெற்றுள்ளார்கள் என்றும்,
அதன் காரணத்தினால் இவ்வாறு குடும்ப உறுப்பினர்களை நாட்டுக்குள் உள்வாங்குவது தொடர்பில் இணக்கப்பாடு ஒன்றை கண்டுப்பிடிக்கப்பட்டுளது என்றும் தெரிவித்து இருந்தது.
அதாவது ஆப்கானிஸ்தான் நாடு மற்றும் சிரியா நாட்டில் இருந்து இவ்வாறான குடும்ப உறுப்பினர்களை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு காணப்பட்டு இருந்தது.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு மொத்தமாக இது வரை 120 000பேருக்கு இந்த நாட்டிக்குள் குடும்ப உறுப்பினர்களை அழைப்பதற்கு விசா வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு இந்த தொகையானது குறைவாக காணப்பட்டதாக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.
கூடுதலாக சிரியா நாட்டில் இருந்து வந்தவர்களுக்கு இவ்வாறான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதும், இதேவேளையில் ஆப்கானிஸ்தான் நாட்டவர்களும் இவ்வாறேவந்ததாகவும் தெரியவந்துள்ளது.