சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரின் மோசமான செயல் – மாயமான ஐபோன்கள்
சிங்கப்பூரில் சுமார் 25,000 க்கும் மேற்பட்ட iPhone கைப்பேசிகளை திருடிய வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லிம் ஜென் ஹீ என்ற முன்னாள் உதவி செயல்பாட்டு மேலாளருக்கு நேற்று 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் அப்போது பணிபுரிந்த “பெகாட்ரான் சர்வீஸ் சிங்கப்பூர்” நிறுவனத்துக்கு அவர் செய்த திருட்டு செயல் காரணமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் இழப்பு ஏற்பட்டது.
ஆகவே அந்நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தப்படி Apple நிறுவனத்திற்கு இழப்பீடு தொகையை கொடுக்க வேண்டியிருந்தது.
குற்றங்கள் நடந்த நேரத்தில், சிங்கப்பூர் மற்றும் ஆசியாவின் பிற நாடுகளில் உள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன் பழுதுபார்க்கும் சேவைகளை பெகாட்ரான் நிறுவனம் வழங்கி வந்தது.
51 வயதுமிக்க மலேசியரான லிம், இரு நம்பிக்கை துரோக குற்றச்சாட்டுகளுக்காக கடந்த மே மாதம் குற்றம் சாட்டப்பட்டார்.
இன்னொருவருடன் சேர்ந்துகொண்டு அவர் அந்த வேலையை செய்ததாக கூறப்படுகின்றது.