இலங்கையில் முதல் முறையாக 22 கரட் தங்கத்தின் விலை 300000 தொட்டது!
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்ததன் காரணமாக, உள்ளூர் சந்தையில் 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண்டின் விலை இன்று (08) வரலாற்றில் முதல் முறையாக 300,000 ஐ தாண்டியுள்ளது.
உலக சந்தையில் ஏற்பட்ட மாற்றமே இந்த அதிகரிப்பிற்கு காரணமாகும். இதற்கமைய நாட்டில் நேற்று 290,500 ரூபாயாக இருந்த 22 கரட் தங்கத்தின் விலை இன்று காலை 296,000 ரூபாயாக ஆக உயர்ந்துள்ளது.
இருப்பினும், இன்று மூன்று முறை தங்கத்தின் விலை அதிகரித்தது, தற்போது வரை கொழும்பு ஹெட்டிவீதி சந்தை தரவுகளுக்கு அமைய 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண்டு விலை 303,400 ஐ எட்டியுள்ளது.
இதற்கிடையில், நேற்று 314,000 ரூபாயாக இருந்த 24 கரட் பவுண் ஒன்றின் விலை இன்று மாலை 328,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.





