காசாவில் தலைவிரித்தாடும் உணவுப் பஞ்சம் – 93 குழந்தைகள் உள்பட 169 பேர் உயிரிழப்பு

காசா பகுதியின் மக்கள் தொடர்ந்து கடுமையான உணவுப்பஞ்சத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இஸ்ரேல் ராணுவம் அங்கு உணவு மற்றும் அடிப்படை தேவைகளை கொண்டுவரும் அனுமதிகளை மறுத்ததன் காரணமாக, இதுவரை 93 குழந்தைகள் உள்பட 169 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதிய உணவின்றி, ஊட்டச்சத்து குறைபாட்டால் தீவிரமாக பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவன் அபு காதிர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விளையாட்டு போட்டிகளில் பல்வேறு பரிசுகளை வென்றுள்ள இந்த இளையவர், உயிரிழப்பதற்கு முன் அவரது உடல் எடை 70 கிலோகிராமிலிருந்து 25 கிலோகிராமாக குறைந்திருந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.
(Visited 2 times, 2 visits today)