ஸ்பெயினை உலுக்கிய வெள்ளம் – மக்களுக்கு உதவ களமிறங்கிய 10,000 அதிகாரிகள்
ஸ்பெயினில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெலன்சியா நகருக்கு மேலும் 10,000 பொலிஸ் அதிகாரிகளும் படைவீரர்களும் அனுப்பப்பட்டுள்ளனர்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக மோசமான வெள்ளப் பேரிடர் அங்கு ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் ஸ்பேனிய அரசாங்கம் வெள்ளப் பேரிடரை முறையாகக் கையாளவில்லை என்று பரவலாகக் குறைகூறப்படுகிறது.
வெள்ளத்தால் மாண்டோர் எண்ணிக்கை 211 க்கு உயர்ந்திருக்கிறது. சுமார் 2000 பேரை இன்னும் காணவில்லை. அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தொடங்கிய கனத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டது. சாலைகள் பாலங்கள் சேதமடைந்தன; நகரச் சாலைகளில் சேறு படிந்திருக்கிறது. குடியிருப்பாளர்கள் உணவு, குடிநீர், மின்சாரச் சேவை இல்லாமல் தவிக்கின்றனர்.





