இத்தாலியில் கரைபுரண்டோடும் வெள்ளம் – ஜெர்மனிய பிரஜை மாயம்!
இத்தாலியின் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வாகனம் ஒன்றில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், வெள்ளத்தை சமாளிக்க வீட்டின் கூரையின் மேல் ஏறிய சிலரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்பு பணிகளுக்காக 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் லோம்பார்டி முழுவதும் 650க்கும் மேற்பட்ட அவசரகால சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
செவெசோ மற்றும் லாம்ப்ரோ ஆகிய நதிகள் ஆபத்தான அளவை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் வெள்ளத்தில் சிக்கிய ஜெர்மன் பிரஜை ஒருவர் மாயமாகியுள்ளார். அவரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.





