ஓமானை உலுக்கிய வெள்ளம் – 18 பேர் உயிரிழப்பு

ஓமானில் பெய்து வரும் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காணாமல் போன இருவரை மீட்புக் குழுக்கள் இன்னும் தேடி வருவதாக அவசரகால மேலாண்மைக்கான தேசியக் குழு தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக முசந்தம், அல் புரைமி, அல் தாஹிரா மற்றும் அல் தகிலியா ஆகிய ஐந்து அலுவலகங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் பணியை அந்நாட்டு அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆறு பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்று ஓமான் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
(Visited 32 times, 1 visits today)