இரத்தினபுரியின் பல பகுதிகளில் வெள்ளம் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
இரத்தினபுரியில் 12 மணித்தியாலமாக தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது.
குருவிட்ட, எலபாத மற்றும் கிரியெல்ல உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இப்பகுதியில் உள்ள பல சாலைகள் மற்றும் ரத்தினச் சுரங்கங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான மழை மற்றும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், மக்களின் வாழ்வதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் குறிப்பிட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)





