ஜெர்மனிக்கு புறப்பட்ட விமானத்தில் 5000 அடி உயரத்தில் ஏற்பட்ட பரபரப்பு – காப்பாற்றப்பட்ட பயணிகள்

வொஷிங்டனிலிருந்து ஜெர்மனிக்கு புறப்பட்ட போயிங் டிரீம்லைனர் விமானத்தில் புறப்பட்ட சிலநிமிடங்களுக்குள்ளே எஞ்சின் கோளாறு ஏற்பட்டது.
விமானம் 5,000 அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்தபோது, அதன் இடதுபக்க எஞ்சின் திடீரென பழுதடைந்தது. இதையடுத்து விமானிகள் “MAYDAY” என அவசர உதவி அழைப்பு விடுத்தனர்.
விமானம் 5000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இடதுபக்கத்தில் உள்ள எஞ்சின் பழுதானது. எஞ்சின் பழுதானதை அடுத்து எரிபொருள் தீர, விமானம் வானில் சிறிது நேரம் வட்டமடித்தது. எரிபொருள் தேவையான அளவுக்கு தீர்ந்த பிறகு விமானம் மீண்டும் வொஷிங்டனிலேயே தரையிறங்கியது.
இந்தச் சம்பவத்தில் எந்தப் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
(Visited 59 times, 59 visits today)