விமானி தனது கடவுச்சீட்டை மறந்ததால் விமானம் திரும்ப வேண்டிய நிலை

அமெரிக்காவின் Los Angeles இருந்து சீனாவின் தலைநகர் ஷாங்காய் நோக்கி பசிபிக் பெருங்கடலில் இரண்டு மணி நேரம் பறந்த பிறகு, யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 257 பயணிகளுக்கு செய்தி வந்தது,அவர்கள் திரும்பி அமெரிக்காவை நோக்கி பறக்க வேண்டி ஏற்பட்டது.
CNN கருத்துப்படி, ஒலி பெருக்கியில் குறித்த சங்கடமான காரணத்தை விமானியே ஒப்புக்கொண்டார்.
பயணி Yang Shuhan ஊடகங்களிடம் கூறுகையில், விமானி அறையில் இருந்த நபர் “மிகவும் விரக்தியடைந்த குரலுடன்” தான் எப்படி “தன் பாஸ்போர்ட்டை மறந்தார்” என்பது பற்றி கூறினார்.
செய்தியின் கீழ் குதியில் காணக்கூடிய விமான கண்காணிப்பு தளமான Flightradar24 இன் தரவு மூலம் பாதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் CNNக்கு என்ன நடந்தது என்பதை உறுதிப்படுத்தியது.
“விமானி கடவுச்சீட்டுடன் விமானத்தில் ஏறவில்லை” என்று ஒரு அறிக்கை கூறுகிறது.
“அன்று மாலை எங்கள் வாடிக்கையாளர்களை மீண்டும் அவர்களின் இலக்குக்கு அழைத்துச் செல்ல ஒரு புதிய குழு தயாராக இருப்பதை நாங்கள் உறுதிசெய்தோம்.”
எனவே இரவு 9 மணிக்கு, யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் கிழக்கு நோக்கிச் செல்ல முடிந்தது, இறுதியில் அது ஷங்காயில் சுமார் ஆறு மணி நேரம் தாமதத்துடன் தரையிறங்கியது.
பயணிகளுக்கு பயண இடையூறு சலுகையாக, உணவு வவுச்சர்கள் வழங்கப்பட்டது மற்றும் இழப்பீடும் வழங்கப்பட்டது.