ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் முயற்சியில் ஒரு குழந்தை உட்பட ஐவர் பலி
ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கான மசோதாவை பிரிட்டன் நிறைவேற்றிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, பிரான்சில் இருந்து ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் முயற்சியில் ஒரு குழந்தை உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பரபரப்பான கப்பல் பாதைகளில் ஒன்றைக் கடக்க சிறிய படகில் 110 பேரை ஏற்றிக்கொண்டு, பயணம் செய்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸ் கடலோர காவல்படையினர் இன்னும் உயிர் பிழைத்தவர்களை தேடி வருகின்றனர்.
“ஆரம்பத்தில் கரையில் சிக்கித் தவித்த பிறகு, படகு மீண்டும் கடலுக்குச் சென்றுள்ளது. அதிக சுமை ஏற்றப்பட்ட படகில் ஒரு கூட்ட நெரிசல் ஏற்பட்டது, இதனால் பலர் பலியாகினர்,” என்று கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எத்தனை பேர் மீட்கப்பட்டனர் அல்லது காணாமல் போயிருக்கலாம் என்று கடலோர காவல்படையினரோ அல்லது காவல்துறையினரோ தெரிவிக்கவில்லை
புலம்பெயர்ந்தோரின் ஓட்டத்தை நிறுத்துவது பிரிட்டிஷ் பிரதம மந்திரி ரிஷி சுனக்கின் அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்,
இந்நிலையில் “இந்த துயரங்கள் நிறுத்தப்பட வேண்டும்,” பிரிட்டனின் உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் கடலில் புலம்பெயர்ந்தோர் மரணம் பற்றி கூறியுள்ளார்.