செய்தி தமிழ்நாடு

மெத்தனால் சப்ளை செய்த ஐந்து பேர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் மரக்காணத்தில் விச சாராயம் குடித்து ஏழு பேர் உயிரிழந்த விவகாரத்தில் மெத்தனால் கலந்த விச சாராயத்தை குடித்ததால் இறந்து போனது தெரியவந்தது.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளர் இளைய நம்பி(45), என்பவர் மெத்தனால் சப்ளை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட போலீசார் நிறுவனத்தின் உரிமையாளர் இளையநம்பி அங்கு பணிபுரிந்த சதீஸ்(27), மணிமாறன்(27), கதிர்(27), உத்தமன்(31), ஆகிய ஐந்து பேரை செங்கல்பட்டு மாவட்ட போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மேலும் அந்த நிறுவனத்தில் சிறிதளவு மெத்தனால் இருந்ததையடுத்து சோதனைக்கு அதனை எடுத்து சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது, இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

(Visited 8 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி