இலங்கை திருகோணமலை முத்துநகர் பகுதியில் ஐந்து விவசாயிகள் கைது: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

திருகோணமலை முத்துநகர் பகுதியில் கைது செய்யப்பட்ட ஐந்து விவசாயிகளையும் எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முத்து நகரில் குறிப்பிட்ட சில இடங்களில் விவசாய நடவடிக்கைகளை தொடரலாம் என திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அனுமதி வழங்கியதற்கு இணங்க அப்பகுதியிலுள்ள விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் குறித்த விவசாயிகளான
1-S. சபருல்லா
2-S. ரிபாஸ்
3-K. சத்தார்
4-N. சுஜாத்
5-A. M. அஜ்மீர்
ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த விவசாயிகளை பார்வையிடுவதற்காக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சென்று பார்வையிட்டார்.
(Visited 1 times, 2 visits today)