கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஐவர் கைது!

12 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை கடத்திய ஐவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஐவரும் இன்று (27.09) டுபாயிலிருந்து நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் கொழும்பை சேர்ந்த வர்த்தகர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
6 கிலோ எடையுள்ள நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளை உடலிலும், பயணப் பொதிகளிலும் மறைத்து வைத்திருந்த நிலையில், அவர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த ஐந்து பேரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)