செய்தி தமிழ்நாடு

நோய் நொடியின்றி வாழ மீன்பிடி திருவிழா

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டி,மருது அய்யனார் கோயில் அருகே அமைந்துள்ள மருதிக்கண்மாயிலில் மழைவரம் வேண்டியும்,

நோய் நொடியின்றி வாழவேண்டியும் நடந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.

மருது அய்யனார் கோயில் அருகில் அமைந்துள்ள மருதிக்கண்மாய் சுமார் 86 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய கண்மாய் ஆகும்.

இந்த கண்மாயில் இருந்து சுமார் 300 ஏக்கர் நெல் வயல்கள் பாசனம் பெறுகிறது.விவசாய பணிகள் முடிவடைந்த நிலையில் கோடைகாலம் துவங்கி தண்ணீர் வற்றியது.

உடனே ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடத்த முடிவு,

செய்து இன்று காலை நல்ல நேரம் பார்த்து 7.15 மணிக்கு மீன்பிடி திருவிழாவை ஊர் முக்கியஸ்தர்கள் ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா வெங்கடேஸ்வரன் ஆகியோர் அறிவித்தனர்.

மருது அய்யனார் கோவிலில் நல்ல மழை பெய்யவேண்டும்,  விவசாயம் செழித்து மக்கள் நோய் நொடியின்றி வாழவேண்டும் என மருது அய்யனாரிடம் வேண்டி கும்பிட்டு மீன்பிடி திருவிழாவை துவக்கி வைத்தனர்.

அதிகாலையிலே இருசக்கர வாகனங்களில் படையெடுத்து வந்த மீன்பிடியாளர்கள் வலை,கச்சா,ஊத்தா,பரியுடன் மருதிகண்மாயில் காத்திருந்தனர்.

ஊர் அம்பலகாரர்கள் மற்றும் பெரியவர்கள் மருது அய்யனாரை வணங்கி கண்மாய் கரையில் இருந்து மீன் பிடிக்க அனுமதி கொடுத்தவுடன் 30க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்களை பிடிக்க துவங்கினர்.

இதில் ஒரு சிலருக்கு பெரிய விரால் மீன்களும் அனைவருக்கும் குறவை, ஜிலேபி,கெண்டை, அயிரை போன்ற நாட்டு வகை மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

(Visited 8 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி