கிரீஸ் கடற்பகுதியில் மூழ்கிய மீன்பிடிப் படகு : 78 பேர் உயிரிழப்பு!
தெற்கு கிரீஸின் கடற்கரையில் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு கவிழ்ந்து மூழ்கியதில் குறைந்தது 78 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானவர்கள் நீரிழ் மூழ்கி காணாமல்போயுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கிரேக்கத்தின் தெற்கு பெலோபொனீஸ் பகுதிக்கு தென்மேற்கே 75 கிலோமீட்டர் (46 மைல்) தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த படகில் இருந்து 104 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிர் பிழைத்தவர்களில், நான்கு பேர் தாழ்வெப்பநிலை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி நோக்கிச் சென்ற குறித்த படகு கிழக்கு லிபியாவில் உள்ள டோப்ரூக் பகுதியில் இருந்து புறப்பட்டதாக நம்பப்படுகிறது.