பிரான்சில் முதல்முறையாக பிறந்த வெள்ளை காண்டாமிருகம்
பிரான்சின் zoo de Montpellier (Hérault) மிருகக்காட்சிசாலையில் வெள்ளை காண்டாமிருகம் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.
இந்த மிருகக்காட்சிசாலையில் வெள்ளை காண்டாமிருக குட்டி ஒன்று பிறப்பது இதுவே முதன்முறையாகும்.
ஜூலை 20 ஆம் திகதி சனிக்கிழமை இந்த குட்டி பிறந்ததாக நேற்று ஜூலை 24 ஆம் திகதி குறித்த மிருகக்காட்சிசாலை அறிவித்துள்ளது.
Nola எனும் ஒன்பது வயது பெண் காண்டாமிருகத்துக்கும், Troy என அழைக்கப்படும் பதின்மூன்றரை வயதுடைய காண்டாமிருகத்துக்கும் இந்த குட்டி பிறந்துள்ளது.
இந்த காண்டாமிருக குட்டிக்கு விரைவில் பெயர்சூட்டு விழா இடம்பெற உள்ளது.
இந்த குட்டியின் பிறப்பை அம்மாவட்ட மக்கள் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
குட்டியை பார்ப்பதற்கு அங்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்த உலகில் காண்டாமிருகங்கள் 26 மில்லியன் ஆண்டுகளாக வசிக்கிறது.
உலகில் மொத்தமாக 13,000 காண்டாமிருகங்கள் மட்டுமே இருப்பதாகவும், அவற்றில் 80% சதவீதமானவை தென்னாப்பிரிக்காவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.