செய்தி விளையாட்டு

முதலாவது T20 போட்டிக்கான ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் அறிவிப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.

இதில் முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி சவுத்தம்டனில் இன்று நடைபெறவுள்ளது.

மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், ஸ்டோய்னிஸ், இங்லிஷ், ஹேசில்வுட், சீன் அப்போட், ஆடம் ஜம்பா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணியில் கேப்டன் பட்லர் காயத்தால் விலகி இருப்பதால் பில் சால்ட் அணியை வழிநடத்துகிறார். இளம் வீரர்களை கொண்டுள்ள இங்கிலாந்து அணியில் ஆல்-ரவுண்டர் ஜேக்கப் பெத்தேல், விக்கெட் கீப்பர் ஜோர்டான் காக்ஸ் அறிமுக வீரர்களாக களம் இறங்குகிறார்கள்.

இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 11ல் வெற்றி பெற்றுள்ளன.2 ஆட்டத்தில் முடிவில்லை. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 11 மணிக்கு தொடங்குகிறது.

(Visited 11 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி