ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் முதல் சட்டவிரோத எடை இழப்பு மருந்து தொழிற்சாலை சுற்றிவளைப்பு

பிரித்தானியாவில் சட்டவிரோதமான முறையில் நடைபெற்று வந்த போலி எடை இழப்பு மருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை அமைப்பின் (MHRA) அதிகாரிகள் நார்தாம்ப்டன்ஷையர் (Northamptonshire) காவல்துறையுடன் இணைந்து நார்தாம்ப்டனில் (Northampton) உள்ள ஒரு தொழிற்சாலையில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் நிரப்ப தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான வெற்று எடை இழப்பு தடுப்பூசிகள், மூல இரசாயன பொருட்கள், 2000க்கும் மேற்பட்ட உரிமம் பெறாத ரெட்டாட்ரூடைட் (retradutide) மற்றும் டைர்செபடைட் (dirsepatide) தடுப்பூசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட தயாரிப்புகளின் தெரு மதிப்பு £250,000க்கும் அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட எடை இழப்பு மருந்துக்கான முதல் சட்டவிரோத உற்பத்தி வசதி இது என்று மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது.

(Visited 2 times, 3 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி