ஐரோப்பா

பிரித்தானியாவில் உயிரிழந்த பெண்ணின் கருப்பையில் இருந்து பிறந்த முதல் குழந்தை!

பிரித்தானியாவில் உயிரிழந்த ஒருவரின் கருப்பையில் இருந்து குழந்தையொன்று பிறந்துள்ளது.

டிசம்பர் மாதம் லண்டனில் உள்ள குயின் சார்லோட் மற்றும் செல்சியா மருத்துவமனையில் சிசேரியன் மூலம் ஹ்யூகோ பவல் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறக்கும் போது 3.1 கிலோ எடையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையின் தாயான கிரேஸ் பெல் (Grace Bell), மேயர்-ரோகிடான்ஸ்கி-குஸ்டர்-ஹவுசர்   என்ற அரிய என்ற அரியவகை நோயுடன்  பிறந்துள்ளார். அதாவது அவர் பிறக்கும்போதே கருப்பையின்றி பிறந்துள்ளார்.

அவர் டீனேஜ் பருவதை அடைந்ததும் இந்த உண்மையை கண்டறிந்துள்ளார். ஒருபோதும் தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை அறிந்து மிகுந்த மனவேதனையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற ஆரம்பத்தில் திட்டமிட்ட கிரேஸ் பெல், பின்னர் பிரித்தானியாவின் கருப்பை மாற்று திட்டத்தில் சேர்ந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து  இறந்த ஒரு இளம் பெண்ணின் கருப்பை அவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அந்த கருப்பையின் உதவியுடன் தான் மேற்படி குழந்தை பிரசுவிக்கப்பட்டுள்ளது.

இது இறந்த ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து ஆரோக்கியமாக பெற்றெடுக்கப்பட்ட  குழந்தையாகும்.  பிரித்தானியாவில் இறந்த ஒரு நன்கொடையாளரின் கருப்பையில் இருந்து   குழந்தை பிறப்பது இதுவே முதல் முறையாகும்.

ஐரோப்பிய நாடுகளில் மொத்தமாக மூன்று குழந்தைகள் இவ்வாறு பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!