லண்டனில் தமிழர்கள் ஒன்றுக்கூடும் பிரபலமான உணவகத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு!

கிழக்கு லண்டனில் உள்ள உணவகம் அருகே நேற்று இரவு (29.05) துப்பாக்கிக்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் குழந்தை உள்பட நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிங்ஸ்லேண்ட் ஹை ஸ்ட்ரீட்டில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த பொலிஸார் குறித்த நால்வரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் குழந்தையின் நிலை ஆபத்தில் இருப்பதாகவும், ஏனைய மூவரின் உடல் நிலை குறித்து அவதானம் செலுத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி தப்பியோடியுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 24 times, 1 visits today)