மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு

மினுவாங்கொட, பொரகொடவத்த பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவரும், கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)