துப்பாக்கி உரிமப் புதுப்பித்தல் காலக்கெடு நீட்டிப்பு
2026 ஆம் ஆண்டிற்கான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. .
2025 செப்டம்பர் முதலாம் திகதி முதல் 2025 டிசம்பர் 31, வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த உரிமப் புதுப்பித்தல் காலம், நிலவும் பேரிடர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2026 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான இறுதி திகதி தற்போது 2026 ஜனவரி மாதம் 31 திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது





