டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து – ஒருவர் மரணம் : 10 பேர் காயம்
கிழக்கு டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் டெல்லி தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
காயமடைந்தவர்களில் ஏழு பேர் ஆனந்த் விஹார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் மூன்று பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
(Visited 6 times, 1 visits today)





