உத்தரபிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து – 3 தொழிலாளர்கள் பலி
உத்தரபிரதேசத்தில் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரிய வெடிவிபத்தில் மூன்று தொழிலாளர்கள் தீக்காயங்களால் இறந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நிஹால் கேடி கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தின் சத்தம் இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு எதிரொலித்தது.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், மீட்பு நடவடிக்கைகளுக்காக காவல்துறையினர், தடயவியல் குழு மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.





