சீனாவின் கிரேட் புத்தர் ஆலயத்தில் தீ விபத்து ;115 அடி புத்தர் சிலை சேதம்

சீனாவின் கன்சு மாகாணம் ஷாந்தன் கவுண்டியில் உள்ள பௌத்த ஆலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 115 அடி புத்தர் சிலை சேதம் அடைந்தது.
கி.பி 425ம் ஆண்டு காலத்தை சேர்ந்த சிலை ஒன்றை பார்த்து இந்த புத்தர் சிலை செய்யப்பட்டதாகவும், சிலையின் ஒரு பகுதி மட்டும் சேதமடைந்ததாகவும் எஞ்சிய பகுதி அப்பிடியே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் கட்டமைப்புகள் தீயில் அழிந்து விட்டதாகவும் ஆனால் ஆலயத்தின் கலாச்சார நினைவிச்சின்னங்கள் சேதமடையாமல் இருப்பதாகவும் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீ விபத்தில் உயிர் சேதம் இல்லை என்றும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)