இந்தோனேசியாவில் தீவிபத்து – உடல் கருகி பலர் பலி! அடையாளம் காண போராடும் காவல்துறையினர்!
இந்தோனேசியாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு சுலவேசி (Sulawesi) மாகாணத்தின் தலைநகரான மனாடோ (Manado) நகரில் உள்ள டமாய் (Damai) முதியோர் இல்லத்தில் நேற்று இந்த தீவிபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களை அடையாளம் காண முயற்சித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையை தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பலர் அடையாளம் காணமுடியாத அளவிற்கு எரிந்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தீவிபத்துக்கான காரணம் அறியப்படாத நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர்.





