வடக்கு லண்டனில் பிரபலமான உணவகம் ஒன்றில் தீவிபத்து : 05 பேர் படுகாயம்!

பிரித்தானியாவின் வடக்கு லண்டனில் உள்ள உணவகம் மற்றும் அதற்கு மேலே கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வடக்கு லண்டனில் உள்ள ஹோலோவேயில் உள்ள டேக்அவே உணவகத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
செவன் சிஸ்டர்ஸ் சாலையில் உள்ள கட்டிடத்தின் தரை தளம் முழுவதும் தீயில் எரிந்து நாசமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து தொடர்பாக லண்டன் தீயணைப்பு படைக்கு சுமார் 20 அழைப்புகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 15 times, 1 visits today)