பின்லாந்து பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
ஹெல்சின்கியின் புறநகர்ப் பகுதியில் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 12 வயது சிறுவன் ஒருவன் இறந்ததற்கு, கொடுமைப்படுத்துதல்தான் காரணம் என்று ஃபின்லாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் விசாரணைகளின் போது, தான் கொடுமைப்படுத்துதலுக்கு இலக்கானதாக கூறியுள்ளதாகவும், பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பின்லாந்து நாட்டின் வான்டா நகரில் மிகவும் பிரபலமான வீர்டோலா பள்ளியில் ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை 800 பேர் படிக்கின்றனர். ஆசிரியர்கள், பணியாளர்கள் என சுமார் 90 பேர் வேலை செய்கின்றனர்.
இந்நிலையில் நேற்று பள்ளி வளாகத்திற்குள் 12 வயது சிறுவன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த குழந்தைகளை நோக்கி சுட்டான். இதனால் குழந்தைகள் அலறியடித்து அங்குமிங்கும் ஓடினர்.
துப்பாக்கி சூட்டில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன், அதே வயதுடைய இரண்டு குழந்தைகள் பலத்த காயமடைந்தன. தாக்குதல் நடத்திய சிறுவனை போலீசார் கைது செய்து காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் தான் கொடுமைப்படுத்துதலுக்கு இலக்கானதாக கூறியுள்ளார்.