உலகின் மகிழ்ச்சியான நாடாக ஏழாவது முறையாக பின்லாந்து முதலிடம்
உலகின் மகிழ்ச்சியான நாடாக தொடர்ந்தும் ஏழாவது முறையாக பின்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதல் 20 நாடுகளில் அமெரிக்கா இடம் பெறவில்லை என்பது சிறப்பு.
முதல் 20 நாடுகளில் அமெரிக்கா இடம் பெறாதது இதுவே முதல் முறை ஆகும். அமெரிக்கா 23வது இடத்துக்கும், ஜெர்மனி 24வது இடத்துக்கும் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் இரண்டாவது மகிழ்ச்சியான நாடு டென்மார்க். ஐஸ்லாந்து மற்றும் சுவீடன் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன.
காசாவில் போரின் நடுவில், இஸ்ரேல் உலகின் ஐந்தாவது மகிழ்ச்சியான நாடு என அங்கிகாரத்தை பெற்றுள்ளது.
நெதர்லாந்து, நார்வே, லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவை உலகின் முதல் 10 மகிழ்ச்சியான நாடுகளில் உள்ளன.
கோஸ்டாரிகா மற்றும் குவைத் ஆகியவை பட்டியலில் 12 மற்றும் 13 வது இடத்தைப் பிடித்துள்ளன.
உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் உலகின் பெரிய நாடுகளும் சேர்க்கப்படவில்லை என்று அறிக்கை கூறுகிறது.
10 மகிழ்ச்சியான நாடுகளில், நெதர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் மட்டுமே 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடுகளாகும்.
இயற்கையுடன் நெருக்கமாக இருப்பது மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலையை பராமரிப்பது பின்லாந்தை உலகின் மகிழ்ச்சியான நாடாக மாற்றியுள்ளது.