நாய் எவ்வளவு காலம் உயிர் வாழும் என்பதை அறியலாம் – பிரித்தானிய ஆய்வில் தகவல்

ஒரு நாயின் மூக்கு அளவு, உடல் அளவு, பாலினம் ஆகியவை நாயின் ஆயுட்காலத்தை நிர்ணயிப்பதாகப் பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
584,000க்கும் அதிகமான நாய்களின் தகவல்கள் திரட்டப்பட்டன. தட்டையான முகங்களைக் கொண்ட Bulldog வகை நாய்களைவிடச் சிறிய, நீண்ட முக அமைப்பு கொண்ட dachshund அல்லது இத்தாலிய greyhound வகை நாய்களின் வாழும் காலம் 3 மடங்கு அதிகம்.
பிரிட்டனின் ஆகப் பெரிய நாய் அறநிறுவனத்தின் தரவு விஞ்ஞானி அதனைத் தெரிவித்தார்.
பெண் நாய்கள் ஆண் நாய்களைவிட அதிகக் காலம் வாழ்ந்தன. பெரிய நாய்களைவிடச் சிறிய நாய்கள் அதிகக் காலம் வாழ்ந்தன. நீண்ட மூக்கைக் கொண்ட சிறிய, நடுத்தர நாய்கள் சராசரியாக 12 ஆண்டுகளுக்கும் மேல் உயிர் வாழ்ந்தன.
(Visited 34 times, 1 visits today)