ஸ்பெயினில் செங்குத்தாக தரையில் மோதிய போர் விமானம் (வீடியோ)
ஸ்பெயின் நாட்டில் போர் விமானம் ஒன்று செங்குத்தாக தரையில் மோதி வெடித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்-ல் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள ஜராகோசா விமான தளத்தில் F/A-18 ஹார்னெட் ரக போர் விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ட்விட்டரில் வேகமாக பரவி வருகிறது. அதில், அமெரிக்காவின் வடிவமைப்பான F/A-18 ஹார்னெட் ரக போர் விமானம் கட்டுப்பாட்டை இழந்து செங்குத்தாக விமான தளத்தின் தரையில் மோதுவதை பார்க்க முடிகிறது.பின் விமானம் மோதிய தரையில் இருந்து மிகப்பெரிய நெருப்பு பந்து ஒன்று கரும்புகையோடு வேகமாக வானில் எழும்புவதை பார்க்க முடிகிறது.
F-18 fighter jet crashed in Spain
During a demonstration flight, "some problems" occurred in the plane.
The pilot managed to eject, his life was not in danger, but he was taken to the hospital with leg injuries.
It is reported that none of the people nearby were injured. pic.twitter.com/lwpPo73sd4
— NEXTA (@nexta_tv) May 20, 2023
இதற்கிடையில் விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்றும், அவர் உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஸ்பெயின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
விமான கண்காட்சிக்காக போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது விபத்துக்குள்ளானதாக ஸ்பெயினின் பொது செய்தி நிறுவனமான EFE தெரிவித்துள்ளது.அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்ட F/A-18 ஹார்னெட் ரக போர் விமானம் 1986ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டு சேவைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.