ஹைதராபாத்தில் காதலனுடன் சேர்ந்து போதைப்பொருள் விற்ற பெண் தொழில்நுட்ப வல்லுநர் கைது
ஹைதராபாத்தில் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையதாக 21 வயது பெண் மென்பொருள் பொறியாளர், அவரது காதலன் மற்றும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனையின் போது கஞ்சா(cannabis), எல்எஸ்டி(LSD) மற்றும் எக்ஸ்டசி(ecstasy) மாத்திரைகள் உட்பட கணிசமான அளவு போதைப்பொருட்களும் ரூ.50,000 ரொக்கம் மற்றும் நான்கு தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் தொழில்நுட்ப வல்லுநர் சுஷ்மிதா தேவி என்கிற லில்லி, 25 வயது உம்மிடி இம்மானுவேல், 28 வயது ஜி சாய் குமார் மற்றும் 24 வயது தாரக லட்சுமிகாந்த் அய்யப்பா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த ஜோடி போதைப்பொருள் வலையமைப்பை நீண்ட காலம் நடத்திவருவதாக ஹைதராபாத் போதைப்பொருள் அமலாக்கப் பிரிவு மற்றும் உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் சட்டவிரோத சந்தையில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புடையவை. மேலும், அவர்களிடமிருந்து ரூ.50,000 ரொக்கம் மற்றும் நான்கு மொபைல் போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.





