தாய்லாந்தில் அச்சுறுத்தும் கொவிட் தொற்று – மருத்துவமனைகளில் நிரம்பும் நோயாளிகள்

தாய்லாந்தில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் தீவிர அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
33,000க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக தாய்லாந்து ஊடகங்கள் கூறுகின்றன.
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது அதிகரிப்பு இரட்டிப்பாகியுள்ளது.
தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் குறைந்தது 6,000 கொவிட்-19 சம்பவங்கள் பதிவானதாகக் கூறப்பட்டது.
கிட்டத்தட்ட 2,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொவிட்-19 நோய்ப்பரவலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்களாகும்.
(Visited 6 times, 6 visits today)